கலைஞரின் கவிதை
பனிமுட்டை அடைகாக்கும்
பசும்புலின் தரைமீது
மணித்தேர் அசைவது போல்
மாதொருத்தி நடந்து வந்தாள்
கனித்தமிழ் சொல் உதிர்க்கும் புலமைமிக்காள்
காக்கைப் பாடிணி பொன்முடியாருக்கு தமிழில் அவள் அக்காள்
அதியமான் நெடுமானஞ்சி வேள்பாரி வள்ளல் நாடன்
சேரமான் மாவெண் கோவன்
கானப்பேர் தந்த வழுதி- மற்றும்
ஆகியோர் புகழைப் பாடித் தமிழுக்கு
அணிபல பூட்டி நின்ற அறிவொளி அவ்வை நல்லாள்!
காலை கதிரவன் போல் கை சிவக்கக்
கொடை வழங்கும் காவலர்கள் வாழ்ந்த தமிழ்நாடு
ஓலை கொண்டு ஒருவன் போர் என்று வந்துவிட்டால்
மாலை சூடுகின்ற வேளை என்றும்
தோளைத் தொத்துகின்ற பெண் கிளியை
புறம் விடுத்து
வாளைக் கூரேற்றி வான்நோக்கி நிமிர்கின்ற வீரமறவர்களின் தாய் வீடு .
பாலை குறிஞ்சி முல்லை நெய்தல் மருதம் என்று
நிலம் வகுத்து வாழ்கின்ற தமிழரிடை
சோலைப் பூவினம்போல் தமிழ் கவிதை மலர வைத்தாள்.
தாயகத்துக் கற்புநிலை பிறழாத காதல் சொன்னாள்.
களம் சென்றார் வீரம் சொன்னாள்.
களத்தில் காதல் இன்னே வரட்டும் என்று சென்றுவிட்ட தலைமகனும்
சந்தன கட்டை போல் மனக்கட்டும்
இலக்கியத்தில் எனக்கூறிப்,
பாதம் முதல் உச்சிவரை குளிர்கின்ற தாய்க்
எண்ணி எண்ணி பெருமை கொண்டாள்.
குலத்தை
Comments
Post a Comment